செய்திகள் :

கோவை குண்டு வெடிப்பு சம்பவம்; முக்கிய குற்றவாளி பாஷா உயிரிழப்பு!

post image

1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை மாநகரின் 12 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 56  பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர்.

பாஷா

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு அல் உம்மா அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இந்த வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பாஷா முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

84 வயதாகும் பாஷா கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிணையில் வெளியில் வந்திருந்தார். சுமார் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இதனிடையே 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்திருந்தார்.

பாஷா

இருப்பினும் பாஷா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். பாஷாவின் உடல் தற்போது உக்கடம் பகுதியில் உள்ள  மகன் சித்திக் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பாஷா உயிரிழப்பு

இந்நிலையில் அவரின் உடல் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மசூதியில் நாளை மாலை நல்லடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோவை மாநகரில் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

நாக்கைப் பிளவுப்படுத்தி டிரெண்டிங் டாட்டூ - கைதுசெய்யப்பட்ட இருவர்; திருச்சி அதிர்ச்சி!

திருச்சி மாநகரம், வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அப்பகுத... மேலும் பார்க்க

காதலை மறுத்து வேறொருவருடன் நடந்த திருமணம்; 4 நாள்களில் நடந்த விபரீதம்

குஜராத்தில் பெண் ஒருவர் திருமணமான நான்கு நாளில் சொந்த கணவனை ஆள் வைத்து கடத்தி கொலை செய்துள்ளார். குஜராத்தில் உள்ள அகமதாபாத்தைச் சேர்ந்த பாவிக் என்பவர் காந்திநகரைச் சேர்ந்த பாயல் என்ற பெண்ணைக் கடந்த வா... மேலும் பார்க்க

Wayanad: பழங்குடியை காரில் இழுத்துச் சென்ற கொடூரம்; பதற வைக்கும் சம்பவம்.. என்ன காரணம்?

கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி பகுதியில் கபினி நதியின் 2 கிளைகள் சங்கமிக்கும் பகுதி கூடல்கடவு என அழைக்கப்படுகிறது. இங்குள்ள செக் டேம் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

3 வயது மகன், இளம்பெண் மர்ம மரணம்; காதல் கணவனை தாக்கிய உறவினர்கள் - வேலூரில் அதிர்ச்சி

வேலூர் சத்துவாச்சாரி அருகிலுள்ள அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரின் காதல் மனைவி நித்யஸ்ரீ என்கிற பிரியா (25).இருவரும் அலமேலுமங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் பயில... மேலும் பார்க்க

Atul Subhash: மர்மமான முறையில் காணாமல் போன கோப்புகள்; சாட்சிகள் அழிக்கப்படுகிறதா?

கடந்த திங்கட்கிழமை உத்தரபிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் தன் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி 24 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.34 வயதான இ... மேலும் பார்க்க

மதுரை: சிறை பொருள் விற்பனையில் கோடிக்கணக்கில் ஊழல்; சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு!

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்துள்ள புகாரில், சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரம், பர... மேலும் பார்க்க