இன்று பூமியை கடந்து செல்லும் விமான அளவுள்ள விண்கற்கள்! ஆபத்தா?
மிகப்பெரிய அதாவது ஒரு விமானம் அளவுள்ள இரண்டு விண்கற்கள் பூமியை நோக்கி டிசம்பர் 16ஆம் தேதி வந்துகொண்டிருப்பதாகவும், இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.
எனினும் தொடர்ந்து விண்கற்களின் பாதையை கண்காணித்து வருவதாகவும் நாசா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2024 எக்ஸ்ஒய்5 என்ற 71 அடி அகலமுள்ள விண்கல், பூமியை மிக நெருக்கத்தில் கடந்து செல்லும் என்றும் இது சுமார் 12.26 மணிக்கு பூமியை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 10,805 மைல்கள் வேகத்தில் பயணித்து வரவதாகவும், கிட்டத்தட்ட 21,80,000 மைல்கள் தொலைவில் கடந்து செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது பூமியிலிருந்து நிலவை விட 16 மடங்கு தொலைவில் இது இருப்பதால், பூமிக்கு ஆபத்து நேரிடாது என்றும் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
அதுபோல, 2024 எக்ஸ்பி6 என்ற விண்கலம், 2024 எக்ஸ்ஒய்5 விண்கலத்தை விட சற்று அளவில் குறைவானது, அதாவது 56 அடி அகலத்தில் உள்ளது. இது மணிக்கு 14,780 மைல் வேகத்தில் பூமியைக் கடந்துசெல்லும் என்றும், இது 41,50,000 மைல்கள் தொலைவில் கடந்து சென்றாலும் இப்போதைக்கு இதனால் ஆபத்து இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த விண்கற்கள் எல்லாம் பூமி உருவாவதற்கு முன்பே உருவானதாகவும், அதாவது இதன் வணுயது 4.6 பில்லியன் ஆண்டுகள் என்றும் கூறப்படுகிறது.