அதிகாரத்தில் இருந்தவர்களுக்காக சட்டதிருத்தம் செய்த காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன்
தந்தையானார் டெவான் கான்வே!!
நியூசிலாந்து வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரருமான டெவான் கான்வேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர்களின் ஒருவரான டெவான் கான்வே, கடந்த 2022ஆம் ஆண்டு தனது தோழி கிம் வாட்சனை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடத்தியது.
இதையும் படிக்க : பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்! கொந்தளித்த ரசிகர்கள்!
இந்த நிலையில், கான்வே - கிம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, தனது மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதால், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக கான்வே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.