பெயர் சூட்டுவதில் பெற்றோருக்கு இடையே மோதல்: 3 வயது குழந்தைக்கு பெயர் வைத்த நீதிம...
முதல் டி20: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் செயின்ட் வின்சென்ட்டின் கிங்ஸ்டவுனில் அமைந்துள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மும்பை 2-ஆவது முறை சாம்பியன்
முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சௌமியா சர்க்கார் 43 ரன்கள் எடுத்தார். பின்னர் எளிய இலங்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் ரோவ்மன் பவலைத் தவிர யாரும் நிலைக்கவில்லை.
அதிரடியாக ஆடிய அவர் 35 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியால் வெற்றி பெற முடிவில்லை. அந்த அணி 19.5 ஓவர்களில் 140 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.