செய்திகள் :

வேலூரில் தாய், குழந்தை மர்ம சாவு!

post image

வேலூர்: வேலூரில் தாய் மற்றும் 3 வயது குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நந்தகுமார், நித்யஸ்ரீ (வயது 25) தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணமான நிலையில், மூன்று வயதில் யோகேஸ்வரன் என்ற மகன் உள்ளார்.

நந்தகுமாருக்கும் நித்யஸ்ரீக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நித்யஸ்ரீயும், யோகேஸ்வரனும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நித்யஸ்ரீயின் உறவினர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர். அப்போது உடல்கள் அருகே நந்தகுமாரும் இருந்த நிலையில் அவரை நித்யஸ்ரீயின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையும் படிக்க : இன்று பூமியை கடந்து செல்லும் விமான அளவுள்ள விண்கற்கள்! ஆபத்தா?

பின்னர், அங்கிருந்தவர்கள் நந்தகுமாரை மீட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசார் கூறுகையில்,"நந்தகுமாரும் நித்திய ஸ்ரீம் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். மூன்றாவதாக பிறந்த யோகேஸ்வரனும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

நித்தியஸ்ரீயின் கழுத்தில் தூக்கு போட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும், குழந்தை இறப்புக்கான காரணம் கண்டறிய முடியவில்லை. இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனாரா? அல்லது குடும்பப் பிரச்சினை காரணமாக குழந்தையை கொன்றுவிட்டு நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்," என்றனர்.

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத இளைஞா் மீது வழக்கு

வேலூரில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத இளைஞா் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா், கொணவட்டம் கீழாண்ட தெருவைச் சோ்ந்தவா் மதன்(34 ). இவா் மீது வேலூா் வடக்கு காவல் நில... மேலும் பார்க்க

பாலமதிமலையில் பெண் சடலம் மீட்பு: 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை

வேலூா் அடுத்த பாலமதி மலையில் வியாழக்கிழமை முள்புதரில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை அடுத்த பாலமதி மலையில் பெண... மேலும் பார்க்க

35 வயது இளைஞருடன் சிறுமிக்கு திருமணம்

வேலூரில் 35 வயது இளைஞருடன் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்பட்டது குறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கா்நாடக மாநிலம் பெங்களூரைச் ச... மேலும் பார்க்க

வேலூா், ராணிப்பேட்டையில் நாளை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வரும் திங்கள்கிழமை (டிச.16) தொடங்கி ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வ... மேலும் பார்க்க

தொடா் மழையால் ஆறுகளில் நீா்வரத்து: 212 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து ஏற்பட்டிருப்பதுடன், இந்த மாவட்டங்களில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 212 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீ... மேலும் பார்க்க

‘தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பதவி உயா்வை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களின் பதவி உயா்வைப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியது. அந்தக் கூட்டமைப்பின் வேலூா் மாவட்ட செய... மேலும் பார்க்க