செய்திகள் :

சென்னை திரும்பிய குகேஷ்-க்கு உற்சாக வரவேற்பு!

post image

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.

14 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 13 சுற்றுகள் வரை டிங் லிரென் - குகேஷ் தலா 6.5 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர்.

இதனால் விறுவிறுப்பாக நடந்த 14வது சுற்று ஆட்டத்தில் டிங் லிரென்னை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரை வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று திங்கள்கிழமை சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் கூடியிருந்தவர்கள் மலர் தூவி குகேஷை வரவேற்றனர். மேலும் குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணைய செயலர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிப்பா? ஜீயர் விளக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டதாகச் சர்ச்சை வெளியான நிலையில், ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட... மேலும் பார்க்க

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

ஆரஞ்சோ, ஆப்பிளோ.. செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

ஆரஞ்சு போட்டாலும் சரி, ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும் என்று ஏரியை ஆய்வு செய்தபின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டலாகக் கூறினார்.தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமா... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் ஜனநாயகத்தை கொன்றுவிடும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் ஜனநாயகத்தை கொன்றுவிடும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்த... மேலும் பார்க்க

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு

திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியில் மழைநீர் வரத்துக்குறைவால் 8,500 கன அடியாக உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர் வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர் வரத்து 7,148 கனஅடியாக குறைந்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,460 கன அடியிலிருந்து வினாடிக்கு... மேலும் பார்க்க