வெற்றிப் பாதையில் நியூஸி.! இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு!
குடும்ப நண்பரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ராகுல்!
மகாராஷ்டிர மாநிலம் மகாபலேஷ்வரில் குடும்ப நண்பரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை சென்றதாகக் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புணே வந்து, கோரேகான் பார்க் பகுதியில் உள்ள ஒரு உணவக விடுதியில் தங்கி, இன்று காலை இறுதிச் சடங்கிக்குச் சென்றார்.
மஹாபலேஷ்வர் என்பது சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியாகும். ராகுலின் புணே மற்றும் மகாபலேஷ்வர் பயணம் தனிப்பட்டதாகும்.
கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் அவரைச் சந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.