கோவை: `இசை, நடனம்... விளையாட்டு' - ஆர்.எஸ்.புரத்தில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்...
மறைந்த தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைனின் கடைசிப் பதிவு!
தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன், உடல் நலக் குறைவால் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 73.
சான் பிரான்சிஸ்கோவில் கடந்த இரண்டு வாரங்களாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிச.15ஆம் தேதி அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜாகிர் ஹுசைன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக பதிவிட்டிருந்த பதிவு ஒன்று தற்போது வைரலாகியிருக்கிறது. அவரது ரசிகர்கள் பலரும் அதில் தங்களது வருத்தத்தையும் இரங்கலையும் பதிவிட்டு வருகிறார்கள்.
கடந்த அக்டோபர் மாதம், ஜாகிர் அமெரிக்காவில் தற்போது இலையுதிர் காலம் தொடங்கியிருப்பதை ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். அமெரிக்காவில் பருவக்காலம் மாறிவருவது குறித்து அவர் ஒரு விடியோவை இணைத்து தனது ரசிகர்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.
ஒரு மிகச் சிறந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் என்று அவர் போட்டிருந்த பதிவே, இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த கடைசிப் பதிவாகிப் போயிருந்தது. அதுவும் இலையுதிர் காலத்தைப் பற்றி அவர் பதிவிட்டிருந்தது, ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக பாதித்துள்ளது.