வெற்றிப் பாதையில் நியூஸி.! இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு!
தர்மபுரி: அருணாச்சலேஸ்வரருக்கு சீர்வரிசை எடுத்து அசத்திய இஸ்லாமியர்கள்; ஆச்சர்யப்பட்ட நிர்வாகம்!
தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில் அமைந்துள்ளது சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாத பௌர்ணமி திதி நட்சத்திரத்தில் அருணாச்சலேஸ்வரர்- ஸ்ரீ உமா மகேஸ்வரி அம்பிகா திருக்கல்யாண வைபவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று திருக்கல்யாண வைபவ விழா நடைபெற்றது. இதில், யாருமே எதிர்பார்க்காத விதமாக ஒரு நிகழ்வு நடந்தது.
பொம்மிடி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மேள தாளத்துடன் அருணாச்சலேஸ்வரருக்கு 281 வகையான சீர் எடுத்து வந்தனர். அதில், பழங்கள், பூக்கள், இனிப்பு வகைகள் என்று இருந்தன.
இதனைக் கண்டு கோயில் நிர்வாகத்தினர் வியப்படைந்து, சீர் எடுத்து வந்தவர்களை வரவேற்று கோயிலில் அமரவைத்தனர்.
இது குறித்துப் பேசும் கோயில் நிர்வாகத்தினர் சிலர், “சாதி, மத, பேதம் என்பது வெறும் வார்த்தைகள் மட்டும் கிடையாது. அதனை அனைவரும் பின்பற்றவும் வேண்டும். அந்த வகையில் வழிபடும் இறைவன் என்பதில் வேறுபாடு இருந்தாலும், கடவுளுக்கு எல்லாரும் சமம் தான். அதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் மத வேறுபாடு இல்லாமல், நேற்று நடந்த திருக்கல்யாண விழாவில் இஸ்லாமியர்களும் கலந்துகொண்டது.
இதே போன்று இம்முறை இனிவரும் காலங்களில் பின்பற்றப்படும்.” என்றனர்.