செய்திகள் :

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு

post image

திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியில் மழைநீர் வரத்துக்குறைவால் 8,500 கன அடியாக உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வந்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் பூண்டி ஏரி கடந்த 5 நாள்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. அப்போது, ஏரியின் பாதுகாப்பு கருதி முதல் கட்டமாக 1,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நீர், கிருஷ்ணா நீர் வரத்து 16500 கனஅடியாக உயர்ந்ததால் கடந்த 4 நாள்களுக்கு முன்பு படிப்படியாக 16500 கனஅடி உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் கரையோர கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.

அரசு சொத்தை விலை பேசினேனா? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்

இந்த நிலையில் பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது திங்கள்கிழமை காலை நிலவரப்படி 33 அடி உயரமும், 2,521 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. மேலும், கடந்த 4 நாள்களாக மழை பெய்யாத நிலையில் ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நீர் வரத்து 7320 கன அடியாக குறைந்தது. அதனால், இந்த ஏரியிலிருநது உபரி நீர் திறப்பு 8500 கன அடியாக குறைந்தது.

அதேபோல் புழல் ஏரியில் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவில், 2854 மில்லியன் கன அடி இருப்புள்ளது. மேலும் மழை நீர் வரத்து 550 ஆக குறைந்ததால், உபரிநீர் திறப்பு 1209 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் 1081 மில்லியன் கன அடியில், 0336 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் 0.500 மில்லியன் கன அடியில், 0382 மில்லியன் கன அடி கொள்ளளவு நீர் இருப்பு உள்ளது.

ஆரஞ்சோ, ஆப்பிளோ.. செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

ஆரஞ்சு போட்டாலும் சரி, ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும் என்று ஏரியை ஆய்வு செய்தபின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டலாகக் கூறினார்.தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமா... மேலும் பார்க்க

சென்னை திரும்பிய குகேஷ்-க்கு உற்சாக வரவேற்பு!

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் ப... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் ஜனநாயகத்தை கொன்றுவிடும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் ஜனநாயகத்தை கொன்றுவிடும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்த... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர் வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர் வரத்து 7,148 கனஅடியாக குறைந்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,460 கன அடியிலிருந்து வினாடிக்கு... மேலும் பார்க்க

அரசு சொத்தை விலை பேசினேனா? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்

புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் புதுச்சேரிக்கு சென்று இருந்தார். அங்கு அவர் சுற்றுலாத் துறை அமைச்சரை சந்... மேலும் பார்க்க

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, நேற்றே காற்றழுத்த தாழ்வ... மேலும் பார்க்க