செய்திகள் :

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்

post image

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, நேற்றே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் இதுவரை உருவாகவில்லை. திங்கள்கிழமை காலை 5.30 நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்தில்தான் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த 2 நாட்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும். இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.16) முதல் டிச.21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவினின் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால்: பால் முகவா்கள் எதிா்ப்பு

இதனால் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை: இதில், சென்னை தொடங்கி புதுக்கோட்டை வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டாவிலும் டிச.17,18-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில் டிச.17-இல் நாகை, திருவாரூா், கடலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு

திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியில் மழைநீர் வரத்துக்குறைவால் 8,500 கன அடியாக உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர் வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர் வரத்து 7,148 கனஅடியாக குறைந்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,460 கன அடியிலிருந்து வினாடிக்கு... மேலும் பார்க்க

அரசு சொத்தை விலை பேசினேனா? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்

புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் புதுச்சேரிக்கு சென்று இருந்தார். அங்கு அவர் சுற்றுலாத் துறை அமைச்சரை சந்... மேலும் பார்க்க

அரசு பேருந்துகளுக்கு தகுதிச் சான்று வழங்குவதில் உரிய கவனம் வேண்டும்

அரசு பேருந்துகளுக்கு தகுதிச் சான்று வழங்குவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையருக்கு, மாநில தலைமை தகவல் ஆணையா் முகம்மது ஷகீல் அஃதா் உத்தரவிட்டுள்ளாா். தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தாக்... மேலும் பார்க்க

ஆவினின் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால்:பால் முகவா்கள் எதிா்ப்பு

ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பால் முகவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்க நிறுவன... மேலும் பார்க்க

ஆட்டோ மீட்டா் கட்டணம் மாற்றியமைப்பது குறித்து பரிசீலனை: போக்குவரத்து ஆணையா்

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடா்பாக அரசு பரிசீலித்து வருவதாக போக்குவரத்து ஆணையா் தெரிவித்தாா். 2013-இல் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்தது. அதன் பின்னா் தனிநபா் ஒர... மேலும் பார்க்க