செய்திகள் :

29 நாள்களில் ரூ.163 கோடி வருமானம் ஈட்டிய சபரிமலை கோவில்!

post image

சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டு 29 நாள்களில் இதுவரை ரூ. 163.89 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சபரிமலை கோவில் சன்னிதானம் சில வாரங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த நிலையில், 29 நாள்களில் இதுவரை 22.67 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4,51,043 பக்தர்கள் அதிகமாக தரிசனம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை ரூ. 163.89 கோடி வருமானம் ஈட்டப்பட்டதாகவும், இதில், அரவணா பிரசாதத்தின் விற்பனை மட்டும் ரூ. 82.67 கோடியைத் தொட்டுள்ளது.

உண்டியல் காணிக்கை ரூ. 52.27 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 22.76 கோடி அதிகமாகும். அரவணா பிரசாதமும் கடந்த ஆண்டை விட ரூ. 17.40 கோடி அதிகமாக விற்றுள்ளது.

இதையும் படிக்க | குற்றவாளிகளுக்கு ஜாமீன்: 10 நாள்கள் தொடர் போராட்டத்திற்கு மருத்துவர்கள் திட்டம்!

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து டிச. 22 அன்று காலை 6 மணிக்குப் புறப்பட்டு டிச. 25 அன்று மாலை 5 மணிக்கு சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும்.

தீபாராதனை நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்றும், கற்பூர ஆரத்தி எடுக்கும் நிகழ்வு டிச. 23, 24 அன்று நடைபெறும் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.

பெயர் சூட்டுவதில் பெற்றோருக்கு இடையே மோதல்: 3 வயது குழந்தைக்கு பெயர் வைத்த நீதிமன்றம்

மைசூரு: பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் பெற்றோருக்கு இடையே கருத்து மோதல் வெடித்து அது நீதிமன்றம் வரை வந்த நிலையில், நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு, குழந்தைக்கு பெயர் சூட்டி, தம்பதியை ஒற்றுமையாக வ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் பேச்சுவார்த்தை!

தில்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக பேச்சுவார்த்தை நிகழ்த்தி வருகிறார். மேலும் பார்க்க

விஜய் திவாஸ்: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

1971 போரில் இந்தியாவிற்கு வெற்றியை தேடிதந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பார்க்க

தில்லியில் இலங்கை அதிபருக்கு அணிவகுப்பு மரியாதை!

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட... மேலும் பார்க்க

தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் காலமானார்

பிரபல தபலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை தெரிவித்தனர். சான் பிரான்சிஸ்கோ நேரப்படி மாலை 4 மணிக்கு ஜாகிா் ஹு... மேலும் பார்க்க

குற்றவாளிகளுக்கு ஜாமீன்: 10 நாள்கள் தொடர் போராட்டத்திற்கு மருத்துவர்கள் திட்டம்!

கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த மேற்கு வங்க மருத்துவர்கள் கூட்டமைப்பு திட்டமிட்... மேலும் பார்க்க