தில்லியில் இலங்கை அதிபருக்கு அணிவகுப்பு மரியாதை!
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோரை சந்திக்கும் அநுர குமார, தில்லியில் வா்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க உள்ளாா்.
மேலும் பிகாரில் உள்ள புத்த கயைக்கும் செல்ல உள்ளாா். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றிபெற்று, அந்நாட்டின் புதிய அதிபராக அநுர குமார திசாநாயக பதவியேற்றாா்.
29 நாள்களில் ரூ.163 கோடி வருமானம் ஈட்டிய சபரிமலை கோவில்!
இதைத்தொடா்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அக்டோபரில் இலங்கை சென்றாா். அப்போது அவா் அநுர குமாரவை சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தாா். இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ளார்.
அவரை தில்லி விமான நிலையித்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். அதிபராக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பயணமாக அநுர குமார இந்தியா வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.