வெற்றிப் பாதையில் நியூஸி.! இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு!
'3 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த 11 வயது ஆப்பிரிக்க சிறுமி மீட்பு' - உடன்வந்த 45 பேரின் நிலை என்ன?
மத்திய தரைக்கடல் பகுதியில் 11 வயது சிறுமி, 3 நாள்கள் தன்னந்தனியாக கடலில் தத்தளித்து பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனிலிருந்து புலம்பெயர்ந்து வந்த படகில் 45 பேருடன் வந்திருக்கிறார் அந்த சிறுமி. அவர்கள் வந்த படகு லம்பேடுசா (இத்தாலியில் உள்ள தீவு) கடற்கரையில் கவிழ்ந்தது, இவர் மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறார் எனக் கூறுகின்றனர் Compass Collective rescue team என்ற மீட்பு குழிவினர்.
அரிதாக கேட்ட சத்தம்
Trotamar III என்ற படகில் மீட்பு படையினர் சென்றுள்ளனர் காம்பஸ் கலெக்டிவ் குழுவினர். இருளில் கடல் மொத்தமும் கறுப்பாயிருக்க, படகின் எஞ்சின் சத்தத்தைக் கடந்து சிறுமியின் பலவீனமான குரல் கேட்டதால் அவரைக் கண்டுபிடிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர் மீட்பு குழுவினர். அப்படி சத்தம் கேட்பது மிகவும் அரிதானது என்றும் கூறியுள்ளனர்.
அவரது குரலைக் கேட்டதும் திட்டமிட்டு அவரை மீட்டுள்ளனர். உடனடியாக ரோமில் உள்ள மீட்பு குழுவினருக்கு தொடர்புகொண்டு அவரை மருத்துவ உதவிக்காக ரோம் அனுப்பியுள்ளனர்.
சிறுமியின் நிலை என்ன?
கடலில் புயல் வீசியதால் படகு கவிழ்ந்திருக்கிறது. 11 வயது பெண் சிறிய மிதவையில் இரண்டு டியூப்களைப் பிடித்தபடி மிதந்துள்ளார். அங்கு உணவோ தண்ணீரோ இல்லை, அத்துடன் அந்த பெண் hypothermia-வால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் நினைவை இழக்க வில்லை.
கடுமையான வானிலை காரணமாக மீட்பு படையினர் அந்த பெண்ணை கண்டடைய 3 நாட்கள் ஆகியிருக்கிறது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மேலும் 2 பேரைப் பார்த்ததாகவும் அதற்குப் பிறகு அவர்களைக் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.
மத்திய தரைக்கடல்: 2014 -ல்லிருந்து 24,300 பேர் இறப்பு
மத்திய தரைக்கடல் துனிசியா, லிபியா, இத்தாலி மற்றும் மால்டா நாடுகளை இணைக்கக்கூடியது. புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு மிகவும் ஆபத்தான தடமாகும்.
2014-ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் 24,300 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயிருக்கின்றனர். இது பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே. சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு 30,900 பேர் மத்திய தரைக்கடல் பகுதியில் இறந்திருக்கலாம் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.