செய்திகள் :

திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் 'தீ' விபத்து - சிறுவன் உட்பட 6 பேர் பலியான சோகம்- நடந்தது என்ன?

post image

திண்டுக்கல் - திருச்சி மேம்பாலம் அருகே என்ஜிஓ காலனி பகுதியில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற எலும்பு முறிவு மருத்துவமனை இயங்கி வருகிறது. நகரின் முக்கிய பகுதியில் 4 மாடி கட்டடங்களை கொண்ட இந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாக தினமும் வந்து சென்று மருத்துவம் பார்த்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீட்புப்பணி

இன்றுகாலை முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 9 மணி போல மருத்துமனையின் ஐசியூ வார்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியிருக்கிறது. ஐசியூ அறையில் பல்வேறு இயந்திரங்கள், மின்சாதனங்கள் இருந்ததால் தீ விரைவாக பரவி மருத்துவமனையின் பிற பகுதிகளுக்கும் சடசடவென பரவியிருக்கிறது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டவுடன் 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டன. மேலும் மருத்துவமனையில் தீப்பற்றிய பகுதியில் சிக்கியிருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் தீயில் சிறுவன் உட்பட 6 பேர் சிக்கி உயிரிழந்தனர். மொத்தம் 28 உள்நோயாளிகள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உடனடியாக 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.

மருத்துவமனை அருகே திரண்ட மக்கள்

மாவட்ட கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி பிரதீப் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நகரின் முக்கிய பகுதியில் நடந்த இந்த தீ விபத்தினால் நோயாளிகளின் உறவினர்களும் அக்கம் பக்கம் பகுதி மக்களும் திரண்டு வந்ததால் திண்டுக்கல் நகரே பரபரப்பாகியது. போலீஸார் அனைவரையும் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்த டிரைவர்; மும்பை பஸ் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 7-ஆக அதிகரிப்பு!

மும்பையில் நேற்று முன் தினம் இரவு குர்லா பகுதியில் மாநகராட்சி பேருந்து சாலையோரம் இருந்த வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் க... மேலும் பார்க்க

கனமழை ஈரப்பதம்: வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி! - அறந்தாங்கியில் சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கொடிவயல் மேலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது மனைவி அம்மு, மகன் ஆதிஸ்வரன், மகள் இனியவள் ... மேலும் பார்க்க

மும்பை பஸ் விபத்து: உயிரை பணயம் வைத்து மகளை காப்பாற்றிய தாய்; நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!

மும்பையில் நேற்று முன் தினம் இரவு நடந்த பஸ் விபத்து மும்பையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 42 பேர் காயம் அடைந்தனர். விபத்தின் போது கண்மூடித்தனமாக ... மேலும் பார்க்க

Nilgiris: `நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த 9 யானைகள்' - கூரையை பிரித்து உயிர் தப்பிய குடும்பம்..!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பெருந்தோட்டங்கள் நிறுவப்பட்டுள்ளது. வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்... மேலும் பார்க்க

மும்பை: சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதிய மாநகராட்சி பேருந்து - 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

மும்பையில் மாநகராட்சி பஸ் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது. மும்பை குர்லா மேற்கு பகுதியில் இருந்து அந்தேரியை நோக்கி மாநகராட்சி பெஸ்ட் பேருந்து ஒன்று நேற்று இரவு ... மேலும் பார்க்க

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து 3- ம் ஆண்டு நினைவஞ்சலி! என்ன சொல்கிறார்கள் நஞ்சப்பா சத்திரம் மக்கள்?

இந்திய ராணுவத்தின் கருப்பு தினமாக கருதப்படும் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. கடந்த 2021- ம்‌ ஆண்டு டிசம்பர் 8-ம் தேதியான இதே நாளில் கோவையிலிருந்து நீலகிரி மாவ... மேலும் பார்க்க