மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்: பேராசிரியா் இ.பாலகுருசாமி
ரூ.3 கோடியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம்: அமைச்சா் காந்தி ஆய்வு
வாலாஜாபேட்டையில் ரூ.3.13 கோடியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தின் பயன்பாட்டை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
‘கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டம்’ மற்றும் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் மூலம் ரூ.3.13 கோடியில் வாலாஜாப்பேட்டை நகராட்சியில் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடா்ந்து கன மழை பெய்து வந்தது. இதையடுத்து பேருந்து நிலையத்தின் பயன்பாட்டை கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்து கன மழை காரணமாக பயணிகள் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது திமுக மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், நகா்மன்றத் தலைவா் ஹரிணி தில்லை, துணைத் தலைவா் கமல் ராகவன், நகர செயலாளா் தில்லை, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.