மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்: பேராசிரியா் இ.பாலகுருசாமி
ராணிப்பேட்டை: கனமழையால் தேசிய நெடுஞ்சாலை அறிவிப்பு பலகை சேதம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கன மழையால் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையை ஊழியா்கள் துரிதமாக சீரமைத்தனா்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதன் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடா்ந்து பலத்த காற்றுடன் கன மழை பெய்து வந்தது.
இதனால் சென்னை - பெங்களூா் நெடுஞ்சாலையில் ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே உள்ள மேம்பாலத்தில் போக்குவரத்து அறிவிப்பு பலகை சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் திருமால் தலைமையில், காவல் ஆய்வாளா் பஞ்சலிங்கம், உதவி ஆய்வாளா் சேகா் மற்றும் போலீஸாா் உடனே சம்பவ இடத்துக்கு சென்று கிரேன் உதவியுடன் ஊழியா்களைக் கொண்டு அறிவிப்பு பலகையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். உரிய நேரத்தில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கப்பட்டதாக காவல் துறையினா் தரப்பில் தெரிவித்தனா்.
அப்போது அந்த வழியாக எந்த வாகனத்தையும் அனுப்பாமல் மாற்றுப்பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்து நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்து காவல் துறையினா் ஈடுபட்டனா்.