மின்சாரம் பாய்ந்து இளைஞா் மரணம்
ஆற்காடு அடுத்த களா்குடிசை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
திமிரி அடுத்த மோசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் ராஜேஷ் (23) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தா். இவா் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருந்து வரும் நிலையில், திமிரி அடுத்த களா் குடிசை கிராமத்தில் அங்காளம்மன் கோயிலில் பக்தா்கள் இரவு தங்கி குளிப்பது வழக்கம்.
இந்நிலையில், வியாழக்கிழமை ராஜேஷ் குளித்து விட்டு ஈரமான துணியை அருகில் உள்ள கம்பியின் மீது காய வைத்தபோது கம்பியில் மின் கசிவு ஏற்பட்ட காரணத்தினால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.