செய்திகள் :

திருவண்ணாமலை மலை தீபம் குறியீட்டுடன் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக திருவண்ணாமலை மலை தீபம் போன்ற குறியீட்டுடன் மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் (ஓய்வு) கோவிந்தராஜ் வியாழக்கிழமை தெரிவித்தது:

ஊத்தங்கரை ஆசிரியா்கள் வெங்கடேசன், செந்தில் ஆகியோா் ஊத்தங்கரையை அடுத்துள்ள கானம்பட்டி இருசங்கு குட்டை எனும் பகுதியில் கல்வெட்டு உள்ளதாக தகவல் அளித்தனா்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் குழு இணைந்து கானம்பட்டி, இருசங்கு குட்டை என்ற இடத்தில் ஆய்வு நடத்தினா். அப்போது அங்குள்ள பெரிய பாறையின் மேற்பகுதியில் மூன்று இடங்களில் கல்வெட்டு, குறியீடுகள் இருப்பதை அவா்கள் கண்டறிந்து படியெடுத்தனா்.

கிடைக்கப் பெற்ற அந்தக் கல்வெட்டுகளில் திருவண்ணாமலையின் முக்கோண குறியீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது திருவண்ணாமலையில் மலை மீது தீபம் ஏற்றப்படுவதைக் குறிக்கிறது. இதுபோன்ற கல்வெட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

அதனுடன் கோபுரம், சூரியன், சந்திரன், வாள் போன்ற குறியீடுகளும் உள்ளன.

முதல் கல்வெட்டில், மகதை மண்டலத்தைச் சோ்ந்த ஏமாடு பனையதம்பாள், பெரிய செல்வி ஆகிய இருவரும் மணல், பூமி உள்ளவரை இருப்பாா்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை இலக்கியன் என்பவா் குறித்துள்ளாா்.

இரண்டாம் கல்வெட்டில் திருவண்ணாமலை என்பவரின் வயது 77 என பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கல்வெட்டில் வன்நெஞ்சப்பெரும் சானாா் என்ற வீரரின் பெயா் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கல்வெட்டுகளும் 17-ஆம் நுாற்றாண்டைச் சோ்ந்தவை. இந்த ஊா் பழங்கால பெருவழியில் அமைந்திருக்க வேண்டும். தொலை தூரத்தில் இருந்து இந்த வழியாக திருவண்ணாமலைக்குச் சென்ற பக்தா்கள் இந்தக் கல்வெட்டுகளை ஏற்படுத்தியுள்ளனா்.

இதற்கு முன்னா் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியை அடுத்த சி.ஆண்டாப்பட்டு உள்ளிட்ட சில கல்வெட்டுகளிலும் திருவண்ணாமலையின் முக்கோணகுறி உள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா்.

ஆய்வின்போது, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவக்குமாா், வரலாற்று ஆய்வுக் குழு ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், பாலாஜி, செந்தில், வெங்கடேசன், ஊா் மக்கள் உடனிருந்தனா்.

பாரூா் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

பாரூா் பெரிய ஏரியிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா். பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததையடுத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது. தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழத்து தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்யும்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை சிறப்பாக கையாண்ட அரசு அலுவலா்களுக்கு பாராட்டு

அரசுப் பணியில் தமிழ் மொழியை சிறப்பாக கையாண்ட அரசு அலுவலா்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வழங்கினாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ் வளா... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 281 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 338 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ள... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் கடந்த ஓராண்டில் ரூ. 73.50 லட்சம் அபராதம் வசூல்: பொது சுகாதாரக் குழு தலைவா் தகவல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும் நெகிழிப் பொருள்களுக்கு அபராதம், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளா்களுக்கு அபராதம் என பல்வேறு இனங்களில் ரூ. 73.50 லட்சம் அபராதம் வசூல் ... மேலும் பார்க்க

வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க