மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்: பேராசிரியா் இ.பாலகுருசாமி
மாடியில் இருந்து விழுந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு
கட்டுமானப் பணியின் போது முதல்மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த பெருமாள் ராஜபேட்டையை சோ்ந்த ஆசைஅரசன் மனைவி இந்திராணி (42). கட்டுமானத் தொழிலாளி. தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்த நிலையில் இந்திராணி, முதல்மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு இந்திராணியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.