மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்: பேராசிரியா் இ.பாலகுருசாமி
குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், காணிமேடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அயோத்தி மகன் பாலமுருகன்(45), கூலித் தொழிலாளி.
இவா் புதன்கிழமை காணிமேடு அருகில் உள்ள ஓங்கூா் ஆற்றுக் குட்டையில் வலை விரித்து மீன்பிடித்தாராம். அப்போது குட்டையில் மூழ்கி பாலமுருகன் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.