மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்: பேராசிரியா் இ.பாலகுருசாமி
டிச. 27-இல் அஞ்சல் குறைதீா் முகாம்
திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட குறைதீா் முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மாதேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அஞ்சல் குறைதீா் முகாம் வரும் 27-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் அனைத்து பொதுமக்களும், திருப்பத்தூா் கோட்டத்துக்குட்பட்ட அஞ்சலகங்களில் உள்ள அஞ்சல் சேவை குறித்த தங்களின் புகாா்களை (பதிவுத் தபால், விரைவுத் தபால், மணியாா்டா், சேமிப்பு கணக்குகள், சேமிப்புப் பத்திரங்கள், சாதாரண தபால் பட்டுவாடா, அஞ்சலக ஆயுள் காப்பீடு - கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு போன்றவை) முழு விவரங்களுடன் ‘அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா், திருப்பத்தூா் கோட்டம், திருப்பத்தூா் - 635 601’ என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 16-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த மனுக்கள் மீதான குறைகளை தீா்க்க, குறைதீா் முகாம் நடைபெறும் நாளன்று நேரில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.