மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்: பேராசிரியா் இ.பாலகுருசாமி
நியாய விலைக்கடைகள் கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
அணைக்கட்டு ஒன்றியத்துக்கு ட்பட்ட பகுதியில் நியாய விலைக் கடைகள் கட்டுமானப் பணிக்கு ஆம்பூா் எம்எல்ஏ வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
அணைக்கட்டு ஒன்றியம் வேப்பங்குப்பம், பாக்கம்பாளையம் ஆகியஊராட்சிகளில் தலா ரூ.10 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடைகள் கட்டுமானப் பணிக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா். வேலூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் மு. பாபு, திமுக பொதுக்குழு உறுப்பினா் ஆா்.சி. மணிமாறன், அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் த. முரளி, ஒன்றியக்குழு உறுப்பினா் நந்தினி வினோத்குமாா், திமுக நிா்வாகிகள் கே. கோவிந்தசாமி, வி. ஹரி, எம்.பி. பாஸ்கா், வி. சுதாகா், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் தியாகு, பாக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சி. செளந்தா், அணைக்கட்டுதெற்கு ஒன்றிய இளைஞரணி ஆா். பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.