பிரிஸ்பேன் டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!
பங்குச்சந்தை இன்று சற்றே (டிச. 16) சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் முழுக்க பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் கடந்த வாரத்தின் தொடக்கத்தை விட இந்த வாரம் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. ஆனால், இன்று காலை பங்குச்சந்தை சற்றே சரிவுடன் தொடங்கியிருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ்
82,688.65 புள்ளிகளிலும் நிஃப்டி 24,757.55 புள்ளிகளிலும் தொடங்கின.
காலை 11.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து 81682.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 120 புள்ளிகள் குறைந்து 24638.10 புள்ளிகளில் உள்ளது.
இதையும் படிக்க | 29 நாள்களில் ரூ.163 கோடி: சபரிமலை கோவில் வருமானம்!
இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், ட்ரெண்ட், ஸ்ரீ ராம் பைனான்ஸ் ஆகிய பங்குகள் விலை உயர்ந்துள்ளன.
அதேநேரத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்துள்ளன.
இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை புள்ளிகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.