செய்திகள் :

இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு

post image

இந்தியாவிலிருந்து ரூ.8,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.79 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்தமாக 8,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை நிறுவனத்தின் ஏற்றுமதி மையமாக மாற்றும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை அதிகரிக்கும் எங்களது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்ததையடுத்து ஏற்கெனவே நிர்ணயிக்கபட்டிருந்த ஏற்றுமதி இலக்கை நான்கு மடங்காக்கியுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 2,000 கோடி டாலர் (சுமார் 1.7 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்தது.

நவம்பரில் உயா்ந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

புது தில்லி: கச்சா சூரியகாந்தி, சோயாபீன் எண்ணெய் ஆகியவை அதிக அளவில் இறக்குதியானதால் கடந்த நவம்பரில் இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 38.5 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய எண்... மேலும் பார்க்க

மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் இறக்குமதி செய்ய இனி அனுமதி பெற வேண்டும்!

புதுதில்லி: மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்ய நிறுவனங்கள், இனி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில், அதற்கான விண்ணப்பங்கள் டிச... மேலும் பார்க்க

ஸ்விக்கி பங்கு 4 சதவிகிதத்திற்கும் மேலாக சரிவு!

புதுதில்லி: முதலீட்டாளர்களுக்கான ஒரு மாத லாக்-இன் காலம் காலாவதியானதை அடுத்து, லாபத்தை முன்பதிவு செய்ய முயன்றபோது, உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் பங்குகள் இன்று 4 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்த... மேலும் பார்க்க

கடும் சரிவிலிருந்து சற்று மீண்ட ரூபாய் மதிப்பு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு காசு குறைந்து ரூ.84.84 காசுகளாக இன்று (டிச. 11) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடும் சரிவுவாரத்தின் முதல் வணிக நாளான திங்கள் கிழமை இதுவரை இல்லாதவகையில் சரிந... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு; ஐ.டி. மற்றும் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள், அமெரிக்க பணவீக்க தரவுகளுக்காகவும், இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு தரவுகளுக்காகவும் காத்திருந்ததால், பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்... மேலும் பார்க்க

அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையில் இந்தியா உலகளவில் முதல் இடத்தை பிடிக்கும்!: நிதின் கட்கரி

புதுதில்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆட்டோமொபைல் துறையில் இந்தியா உலகளவில் முதலிடத்திற்கு உயரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.அமேசான் சம்பாவ் உச்சி மாநாட்டில் இன்று கலந்த... மேலும் பார்க்க