மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6,384 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை(டிச.13) காலை வினாடிக்கு 4,727 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,384 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க |எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 117.04 அடியிலிருந்து 117.31 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 88.55 டிஎம்சியாக உள்ளது. மழையளவு 13.2 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.