திண்டுக்கல்: மருத்துவமனையில் தீ விபத்து! 5-க்கும் மேற்பட்டோர் பலி!
திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று(டிச. 12) இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் தீ பரவியதால் மருத்துவமனையின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வெளியேர முடியாமல் சிக்கிக்கொண்டு பரிதவித்தனர்.
இந்த கோர விபத்தில் மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டில் இருந்த 5-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாததால் தீயில் கருகியும் புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென்றே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.