பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்! கொந்தத்த ரசிகர்கள்!
Zakir Hussain: ``அவருடன் பணியாற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்
பிரபல தபேலா இசைக் கலைஞரும், இயக்குநர், நடிகருமான ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவால், நேற்றிரவு காலமானார்.
நுரையீரல் பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், "ஜாகிர் பாய் எல்லோருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கக்கூடியவர். தபேலாவை உலகளவில் எடுத்துச் சென்ற ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவரது இறப்பு நம் அனைவருக்கும் பேரிழப்புதான். 10 வருடங்களுக்கு முன்பு அவருடன் இணைந்து அவருடன் பணியாற்றி இருந்தாலும் தற்போது அவருடன் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன்.
உங்களை உண்மையிலேயே மிஸ் பண்ணுவோம். அவரது குடும்பத்தினரும், உலகெங்கிலும் உள்ள அவரது எண்ணற்ற மாணவர்களுக்கும் இவரின் இழப்பைத் தாங்கும் வலிமையைப் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.