ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன தமிழக வீராங்கனை!
மகளிா் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சாா்பில் மகளிா் ஐபிஎல் (டபிள்யுபிஎல்) 2025 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்துள்ளனா். 19 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்று வருகிறது.
பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி. 400 ரன்களைக் கடந்து வலுவான முன்னிலை!
மினி ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது. முன்னதாக ஏலத்தில் கமலினிக்கு ரூ.10 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவரை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது. இதேபோல் சிம்ரன் ஷேக்கை ரூ. 1.90 கோடிக்கும் டியான்ட்ரா டாட்டினை ரூ 1.70 கோடிக்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் வாங்கியுள்ளது.
ஐபிஎல் போன்று மகளிா் கிரிக்கெட்டை மேம்படுத்த பிசிசிஐ சாா்பில் மகளிா் ஐபிஎல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது அதிக வரவேற்பு கிட்டி வருகிறது.