செய்திகள் :

ஆம் ஆத்மியின் இறுதிகட்ட வேட்பாளா் பட்டியல்: நியூ தில்லி தொகுதியில் கேஜரிவால் போட்டி

post image

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுகிழமை வெளியிட்டது.

அதில் நியூ தில்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தற்போதைய முதல்வர் அதிஷி மீண்டும் கல்காஜியிலும், சௌரப் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

தில்லி சட்டப்பேரவையின் 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க ஆளும் ஆம்ஆத்மி கட்சி தற்போது இருந்தே தயாராகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அக்கட்சி ஏற்கெனவே 3கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

குகேஷுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ சிசோடியா ஜங்புரா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்ற பெற முடியவில்லை. தொடர்ந்து அரவிந்த் கேஜரிவால் தில்லி முதல்வரானார். பின்னர் தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கேஜரிவால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து தில்லி முதல்வராக அதிஷி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!

மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணியின் அமைச்சர்கள் இன்று (டிச. 15) பொறுப்பேற்றுக்கொண்டனர். நாக்பூரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனைக் கட்சியின் ஏக்நாத் ஷிண்டே, தேசி... மேலும் பார்க்க

2026-க்குள் நக்சலைட்டுகளை ஒழிப்போம்: அமித் ஷா உறுதி!

சத்தீஸ்கரில் வருகிற 2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல்களை முழுவதுமாக ஒழிக்க உறுதியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் காவல்துறையின் 25 ஆண்டுகால தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்... மேலும் பார்க்க

நாக்பூரில் முதல்வர் ஃபட்னவிஸுக்கு பிரமாண்ட வரவேற்பு

மஹாயுதி வெற்றிக்குப் பிறகு தனது சொந்த ஊரான நாக்பூருக்கு ஞாயிற்றுகிழமை சென்ற முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாக்பூரில் பாஜக தொண்டர்களால் நடத்தப்பட்ட பேரணிக்... மேலும் பார்க்க

சர்தார் வல்லபபாய் படேல் நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி

சர்தார் வல்லபபாய் படேல் நினைவு நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நாட்டின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளில் அவருக... மேலும் பார்க்க

யுபிஐ மூலம் ரூ. 223 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்து சாதனை!

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் நிகழாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 15,547 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ரூ. ... மேலும் பார்க்க

ஐடி ஊழியர் தற்கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேர் கைது!

கர்நாடகத்தில் பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்ப்பட்டனர். பெங்களூரில் உள்ள... மேலும் பார்க்க