செய்திகள் :

ஐடி ஊழியர் தற்கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேர் கைது!

post image

கர்நாடகத்தில் பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்ப்பட்டனர்.

பெங்களூரில் உள்ள மஞ்சுநாத் லே-அவுட் பகுதி குடியிருப்பில் வசித்து வந்த அதுல் சுபாஷ் (34) என்ற ஐடி ஊழியர், தனது வீட்டில் கடந்த திங்களன்று (டிச. 9) சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்துகொண்ட அவர், தன்னை விட்டுப் பிரிந்த மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதாக 25 பக்கங்கள் கொண்ட கடிதத்தை எழுதி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில், அதுல் வரதட்சனை கேட்டுத் தொந்தரவு செய்ததாக அவர் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்த அவரது மனைவி குடும்பத்தினர் ரூ. 3 கோடி வரை பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மேலும், தனது 4 வயது மகனைப் பார்ப்பதற்கான உரிமையை வழங்க தனியே ரூ. 30 லட்சம் வரை கேட்டதாகவும் அதுல் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஒரு அயோத்தி போதாதா?

தற்கொலைக்கு முன்னர் அந்தக் கடிதத்துடன் சேர்த்து, சில விடியோக்களையும் பதிவு செய்திருந்த அவர் குடும்பநல நீதிமன்றத்தில் லஞ்சம் கேட்டதையும், திருமணச் சட்டங்கள் ஆண்களுக்கு எதிராக இருப்பதாகவும் பேசியிருந்தார். அத்துடன், தனது அறை சுவற்றில் ‘நீதி கிடைக்க வேண்டும்’ என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்தார்.

தற்கொலை செய்துகொண்ட அதுல் சுபாஷ் (34)

அவரது விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அதுலின் சகோதரர் பிலாஸ் குமார் புகாரளித்தார். அவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த வியாழனன்று (டிச. 12) நிகிதாவைத் தேடி பெங்களூரு காவல்துறையினர் அவர் வசிக்கும் உ.பி.யிலுள்ள ஜான்பூருக்கு விரைந்தனர். அங்கு அவரின் வீடு பூட்டியிருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவர்கள் குடும்பமாக முந்தைய நாள் இரவே வெளியே சென்றதாகக் கூறினர்.

தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் அவர்களைத் தேடிவந்த பெங்களூரு நிகிதாவை ஹரியானா மாவட்டத்தின் குருகிராம் நகரிலும், அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் அவரது சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகியோரை உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரிலும் வைத்து நேற்று (டிச. 14) கைது செய்தனர்.

இதையும் படிக்க | உ.பி. சம்பலில் கலவரத்தால் மூடப்பட்ட கோயில்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

இந்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியான சுஷில் சிங்கானியா இன்னும் கைது செய்யப்படவில்லை.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை, நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்தனர்.

யுபிஐ மூலம் ரூ. 223 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்து சாதனை!

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் நிகழாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 15,547 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ரூ. ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு 98% நிறைவு!

ஹைதராபாத்: தெலங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு கடந்த மாதம் (நவ. 6) தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு பணிகள் 98 சதவிகிதம் நிறைவுற்றுள்ளதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவி... மேலும் பார்க்க

அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

சட்டமேதை அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை தெரிவித்தாா். கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி அரசமைப்புச் ச... மேலும் பார்க்க

வெள்ளம்-வறட்சி அபாயத்தில் 11 மாவட்டங்கள்: ஐஐடி அறிக்கை

பாட்னா, ஆலப்புழை மற்றும் கேந்திரபாரா உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் ‘மிக அதிக’ அபாயத்தில் உள்ளன என்று இரண்டு ஐஐடிக்களின் அறிக்கை தெரிவிக்கின்றன. பெங்களூருவில் ... மேலும் பார்க்க

நடுவானில் பயணிக்கு திடீா் உடல் நலக் குறைவு: பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்

தில்லியில் இருந்து ஜெட்டாவுக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் ஒரு பயணிக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், பாகிஸ்தானில் அந்த விமானம் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது தொடா்பாக இண... மேலும் பார்க்க

உ.பி. சம்பலில் கலவரத்தால் மூடப்பட்ட கோயில்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் வகுப்பவாத கலவரங்களால் மூடப்பட்ட கோயில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சனிக்கிழமை திறக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தின் கக்கு சராய் பகுதியில் பஸ்ம சங்... மேலும் பார்க்க