ஆம் ஆத்மியின் இறுதிகட்ட வேட்பாளா் பட்டியல்: நியூ தில்லி தொகுதியில் கேஜரிவால் போட...
அனுஷ்கா படத்தின் வெளியீட்டுத் தேதி!
நடிகை அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போனதுபோல் இருக்கிறார். பாகுபலிக்குப் பின் சில படங்களில் நடித்தாலும் எதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.
இதற்கிடையே, தன் உடல் எடையைக் கூட்டிய அனுஷ்காவைத் தயாரிப்பாளர்கள் மறக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இறுதியாக, அனுஷ்கா நடித்த ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிக்க: வேட்டையனுக்குக் கள்ளிப்பால் கொடுத்தார்கள்: ஞானவேல்
தொடர்ந்து, அனுஷ்கா மலையாளப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானார். தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தில், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கத்தனார் என்கிற பாதிரியாரின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயசூரியாவும் களியங்காட்டு நீலி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்காவும் நடிப்பதாகக் கூறப்பட்டது.
தற்போது, இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்கான முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், படம் அடுத்தாண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இது பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது.