Relationship: இந்த 3-ம் இருந்தால் உங்கள் நண்பன் உங்களைக் காதலிக்கிறான் என்று அர்...
பிக் பாஸ் 8: சத்யாவைத் தொடர்ந்து வெளியேறும் பெண் போட்டியாளர்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நேற்று (டிச. 15) சத்யா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று மற்றொரு போட்டியாளர் வெளியேறவுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 10 வாரங்களைக் கடந்துள்ளது. 69வது நாளான நேற்று எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே நடிகர் சத்யா வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றிருந்ததால் சத்யா வெளியேற்றப்பட்டார்.
2 போட்டியாளர்கள் வெளியேற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களைக் கடந்த பின்னரும் 15 போட்டியாளர்கள் வீட்டில் இருப்பதால் வாரம் இரண்டுபேர் வீதம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் சாச்சனா, ஆர்.ஜே. ஆனந்தி என இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்ப்ட்டனர்.
இந்த வாரத்தில் ஜாக்குலின், ரயான், செளந்தர்யா, விஜே விஷால், அருண், பவித்ரா, தர்ஷிகா, சத்யா, அன்ஷிதா ஆகியோர் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தன.
கடந்த வாரத்தைப்போன்று இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படவுள்ளனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் இறுதியில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவது வழக்கம்.
எதிர்பாராத திருப்பம்
யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் நாளான சனிக்கிழமையே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சத்யா வெளியேற்றப்பட்டார்.
இது பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் மற்றவர்களிடம் விஜய் சேதுபதி உரையாடினார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மற்றொரு போட்டியாளர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தில் 2வது போட்டியாளராக நடிகை தர்ஷிகா வெளியேறுவார் எனத் தெரிகிறது.
பிக் பாஸ் தொடக்கத்தில் வலுவான போட்டியாளராக இருந்த தர்ஷிகா, கடந்த சில வாரங்களாக வி.ஜே. விஷாலுடன் இணைந்து போட்டியில் கவனம் செலுத்தாதைப்போன்று உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே தர்ஷிகா இந்த வாரம் வெளியேறுவது மக்கள் அளித்த தீர்ப்பு என பிக் பாஸ் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.