Relationship: இந்த 3-ம் இருந்தால் உங்கள் நண்பன் உங்களைக் காதலிக்கிறான் என்று அர்...
தாமதமாகும் இளையராஜா பயோபிக்! என்ன காரணம்?
இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
பண்ணைபுரத்தில் இளையராஜாவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்காக 1950-களின் பண்ணைபுரத்தை செட் மூலம் அமைக்க அருண் மாதேஸ்வரன் முடிவு செய்துள்ளார். இவரும் இளையராஜாவும் அடிக்கடி சந்தித்து படத்தில் என்னென்ன காட்சிகள் எப்படி இடம்பெற வேண்டும் என்பது குறித்து பேசி வருவதாகத் தகவல் வெளியாகியிருந்தன.
இதையும் படிக்க: அனுஷ்கா படத்தின் வெளியீட்டுத் தேதி!
இதற்கிடையே, தனுஷ் ராயன் படத்தில் நடித்தார். அப்படத்திற்குப் பின் இளையராஜா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்க சென்றார்.
இதனைத் தொடர்ந்து, ஹிந்தியில் ஆனந்த் எல். ராய் படத்திலும் தமிழில் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்திலும் தனுஷ் நடிக்கிறார்.
இதனால், இளையராஜா படம் என்ன ஆனது என ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்துள்ளன. படம் கைவிடப்பட்டதா இல்லை வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா என புரியாத சூழலே நிலவுகிறது.