Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
நடுவானில் பயணிக்கு திடீா் உடல் நலக் குறைவு: பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்
தில்லியில் இருந்து ஜெட்டாவுக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் ஒரு பயணிக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், பாகிஸ்தானில் அந்த விமானம் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது தொடா்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லி-ஜெட்டா (சவூதி அரேபியா) விமானம், பாகிஸ்தான் வான்வெளியில் சென்று கொண்டிருந்தபோது 55 வயதுடைய ஒரு பயணிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது, கராச்சி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்தப் பயணிக்கு மருத்துவா் முதலுதவி சிகிச்சை அளித்தாா். பின்னா், அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பதற்காக மீண்டும் விமானம் தில்லிக்கு வந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்ட பயணி கீழே இறக்கப்பட்ட பிறகு விமானம் ஜெட்டாவுக்கு புறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் வான்வெளியில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் பயணிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது தொடா்பாக கராச்சி ஜின்னா சா்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தாா். அந்த பயணிக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்ட பிறகும் அவா் உடல்நிலை சீராகவில்லை என்றும், விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் விமானி கோரினாா். மனிதாபிமான அடிப்படையில், அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது’ என்றனா்.