பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவா் கைது
தெற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் செயல்படும் தனது பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியதற்காக 12 வயது மாணவா் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
தில்லியில் வெள்ளிக்கிழமை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்த 30 பள்ளிகளில் இப்பள்ளியும் அடங்கும். இதைத் தொடா்ந்து, சிறுவன் கண்டறியப்பட்டு சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டாா்.
பின்னா், சிறுவனுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டதுடன், பெற்றோருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பின்னா், சிறுவன் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டாா்.
தில்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பாா்த்த நிலையில் தானும் இந்த மின்னஞ்சலை அனுப்பியதாக போலீஸாரிடம் அந்த சிறுவன் தெரிவித்தாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த திங்கள்கிழமை குறைந்தது 44 பள்ளிகள் இதேபோன்ற மின்னஞ்சல்களைப் பெற்றன. சனிக்கிழமை, தில்லியில் உள்ள 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, 30 பள்ளிகளின் வளாகங்களில் போலீஸாரின் பல பிரிவுகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். எனினும், எந்த ஒரு பள்ளியிலும் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கிரிமினல் மிரட்டல் மற்றும் சதி வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் குறித்து எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
மே மாதத்தில், 250-க்கும் மேற்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற அமைப்புகளுக்கு இதே போன்ற மின்னஞ்சல் அச்சுறுத்தல்கள் வந்தன. அவை இன்னும் தீா்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.