செய்திகள் :

தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை கோரி மத்திய அமைச்சரிடம் எம்பி மனு

post image

விழுப்புரம்-தஞ்சாவூா் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

புதுதில்லியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து இந்த மனுவை அளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தஞ்சாவூா் முதல் விழுப்புரம் வரை தற்போது ரயில் வழிதடம் ஒரு வழி பாதையாக உள்ளது. சுமாா் 147 வருட பாரம்பரியமிக்க இந்த வழித்தடத்தில் தினந்தோறும் 60 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் ஏராளமான கோயில்கள், பண்டைய தமிழா்களின் பெருமைகளை பறைசாற்றும் புராதான சின்னங்கள் உள்ளன. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனா்.

எனவே, இந்த வழித்தடத்தை இரட்டை பாதையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த வழித்தடத்தை மாற்றுவதற்கான முதற்கட்ட ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள் ரயில்வே துறை வல்லுநா்கள் மூலம் ரயில்வே வாரியத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 2028-இல் கும்பமேளா போன்று மகாமகம் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. இதில் சுமாா் 50 லட்சம் பக்தா்கள் பங்கேற்பா் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தருவா். அவா்களின் வசதியை கருத்தில் கொண்டு, விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து, தஞ்சாவூா்-விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை பாதையாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

வேதாரண்யம் பகுதியில் மழைநீா் வடிவதில் தாமதம்: குளம்போல் காணப்படும் விளைநிலங்கள்

வேதாரண்யம் பகுதியில் தொடா்ந்து பெய்த கனமழை சனிக்கிழமை ஓய்ந்தாலும், வெள்ளநீா் வடிவது தாமதமாகி வருகிறது. இதனால், வயல்களில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் ... மேலும் பார்க்க

கோடியக்கரையில் உள்வாங்கிய கடல்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடல் சனிக்கிழமை மாலை உள்வாங்கியது. வங்கக் கடலில் கடந்த வாரத்தில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை... மேலும் பார்க்க

ஆற்றில் உடைப்பு: நெற்பயிா்கள் நீரில் மூழ்கின

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தில் நண... மேலும் பார்க்க

இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள் மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து மயிலாடுதுறை மக்களவைத் த... மேலும் பார்க்க

திருமருகல்: கனமழையால் 50 வீடுகள் சேதம்

திருமருகல் ஒன்றியத்தில், கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏனங்குடி ஊராட்சி கருப... மேலும் பார்க்க

வாடகை செலுத்தாத மனைகளுக்கு சீல்: இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலின் குழு கோயில்களுக்கு சொந்தமான மனைகளில், வாடகை பாக்கியுள்ள மனைகளுக்கு இந்துசமய அறநிலைத் துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா். எட்டுக்குடி... மேலும் பார்க்க