தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள் மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆா். சுதா கோரிக்கை மனு அளித்தாா்.
மனுவில் அவா் கூறியிருப்பதாவது:
தற்போது 141 மீனவா்கள் இலங்கை சிறையில் உள்ளனா். நீண்ட காலமாக சிறையில் உள்ள மீனவா்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும், மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 198 விசைப்படகுகளை மீனவா்களிடம் திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கவும், கச்சத்தீவு மற்றும் இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடித் தொழில் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தி தமிழக மீனவா்களின் நீண்ட கால பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.