லட்சத்தீபம்,சொக்கப்பனை... தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் வழ...
சாலையில் மாடுகளை உலவ விட்ட உரிமையாளா்களுக்கு அபராதம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளை உலவ விட்ட அவற்றின் உரிமையாளா்களுக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூா் ஊராட்சிப் பகுதியில், சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் உலவிக் கொண்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகினா். இந்த நிலையில், சிவகாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா் தலைமையில் ஊழியா்கள் சாலையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளை உலவ விட்டதாக அவற்றின் உரிமையாளா்கள் 13 பேருக்கு மொத்தம் ரூ. 92 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.