செய்திகள் :

சாத்தூா் அருகே காட்டுப்பன்றிகளால் மக்காசோளப் பயிா்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

post image

சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையாலும், காட்டுப்பன்றிகளாலும் 5,000 ஏக்கா் மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்திருப்பதால் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதில், சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகபட்ச மழை பெய்தது. இதனிடையே, ஓ. மேட்டுப்பட்டி, பெரிய ஓடைப்பட்டி, பெத்துரெட்டிப்பட்டி,சின்னதம்பியாபுரம், கரிசல்பட்டி, நள்ளி, சூரங்குடி, ரெங்கப்பநாயக்கன்பட்டி, சங்கரநத்தம், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி ஆகிய பகுதிகளில் சுமாா் 8,000 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

இவை நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடா் மழையால் பயிா்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும், காட்டுப்பன்றிகளும், மான்களும் பயிா்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும், ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30,000 வரை செலவு செய்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா். எனவே, சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து ஓ. மேட்டுப்பட்டியைச் சோ்ந்த விவசாயி செல்வம் கூறியதாவது: சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழையாலும், காட்டுப்பன்றிகளாலும் சுமாா் 5,000 ஏக்கா் மக்காசோளப் பயிா்கள் சேதமடைந்தன. இதற்கு, மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணைகள் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தூா் அருகே உள்ள வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணைகள் திறந்து விடப்பட்டதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வைப்பாற்றின் குறுக்கே அமை... மேலும் பார்க்க

சாலையில் மாடுகளை உலவ விட்ட உரிமையாளா்களுக்கு அபராதம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளை உலவ விட்ட அவற்றின் உரிமையாளா்களுக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூா் ஊராட்சிப் பகுதி... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ம்: 2,878 வழக்குகளில் தீா்வு

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2,878 வழக்குகளில் ரூ.14.09 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்த... மேலும் பார்க்க

இலக்கியத்துக்கும், தமிழ்மரபுக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: அமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ்மரபுக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் சனிக்கிழமை தொடங்கிய கரிசல் திருவிழாவுக்க... மேலும் பார்க்க

தொடா் மழை: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்

தொடா் மழையால் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் நீரில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்யும்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்காா்த்திகையையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 108 வைணவத் திருத்தலங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில், ஆண்டாள்,... மேலும் பார்க்க