செய்திகள் :

திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பெண்கள் அவதி!

post image

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே, நகராட்சி சார்பில் பெண்களின் நலன் கருதி `கட்டணமில்லா சிறுநீர் கழிப்பிடம்' புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டும், மாதக்கணக்கில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாகவே கிடக்கிறது. திருப்பத்தூருக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் பக்கத்து மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான பெண்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கழிவறை திறக்க தாமதம் ஏறப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வேலை பார்த்துக் கொண்டு வரும் பெண்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிவறைக்கு எதிரே உள்ள கட்டணக் கழிவறைக்கு ரூ.10 செலுத்திச் செல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

கட்டணமில்லா சிறுநீர் கழிப்பிடம்'

இது குறித்து அங்குப் பயணம் மேற்கொண்டு வரும் பெண் ஒருவர் கூறுகையில், ``நான் பூ வியாபாரம் செய்து கொண்டு வருகிறேன். தினமும் பேருந்து நிலையத்திற்கு வந்து மார்க்கெட்டில் பூ வாங்கிக் கொண்டு ஊருக்குச் செல்வேன். அப்போது அவசரத்துக்குக்கூட கழிவறைக்குச் செல்ல முடியாமல் பலமுறை சிரமப்பட்டிருக்கிறேன். சில நேரங்களில் கையில் அதிகம் பணம் இருக்காது. ஊருக்குப் போவதற்குத் தேவையான தொகைதான் வச்சிட்டிருப்பேன். அப்போதெல்லாம் கட்டணக் கழிவறைக்குக் காசு கொடுத்துத்தான் போவேன்.

கட்டணமில்லா சிறுநீர் கழிப்பிடம்'

அரசாங்கம் ஏழை எளிய மக்கள் பயன்படணும்னு தான் கட்டணமில்லா கழிவறை அமைச்சிருக்காங்க. அதனால அதைப் பயன்பாட்டுக்கு திறந்து வெச்சா ரொம்ப உதவியா இருக்கும்" என்றார்.

இது குறித்துத் திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ``கான்ட்ரக்டர் இன்னும் எங்களிடம் சாவி ஒப்படைக்கவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிதாகக் கட்டப்பட்டுள்ள இலவச பெண்கள் கழிவறையைத் திறக்க விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கிறோம்" என்றனர்.

பழனி: `திறந்து கிடக்கும் சாக்கடையால் சுகாதார சீர்கேடு, அச்சுறுத்தல்' - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

ஒரு மாதத்திற்கு முன்பே சாக்கடையில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி, இன்னும் சரி செய்யாமல் போடப்பட்டுள்ளது. இது சாலையின் நடுவே உள்ளதால் அதன் வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி... மேலும் பார்க்க

பழனி: சேதமடைந்த மின் கம்பம்; அச்சத்தில் மக்கள்... அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

சிதலமடைந்த மின்கம்பத்தை சரி செய்து கொடுக்குமாறு பலமுறை கேட்டும் அலட்சியம் காட்டி வருகின்றனர் அதிகாரிகள். அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சரி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.த... மேலும் பார்க்க

பிராட்வே: குளமாகிப்போன மாநகராட்சிப் பூங்கா; ஆபத்தை உணராத சிறுவர்கள்.. அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

தமிழகம் முழுவதுமே கனமழை பெய்து கொண்டிருப்பதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளது. அங்குள்ள பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு எச்சரிக்கை விடுத்து வருகிற நிலையில், சென... மேலும் பார்க்க

EPFO: 'வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!' - எதற்கு... எப்படி?

'வருங்கால வைப்பு நிதி உறுப்பினர் இறந்தால் அவரது நாமினிக்கு ரூ.2.5 லட்சம் - ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்' என்பது உங்களுக்கு தெரியுமா...இப்படியான EDLI திட்டம் குறித்து விரிவாக விளக்குகிறார் Wealth ... மேலும் பார்க்க

`2034-ல் அமலுக்கு வரும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்?’ - மோடி அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன?

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே `ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் குறித்த பா.ஜ.க பேசிவருகிறது. தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் பா.ஜ.க, அந்தத் திட்டத்தை கொண்டுவருவதற்கான அனை... மேலும் பார்க்க

NTK: ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை... விழித்துக் கொண்டாரா சீமான்?

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் விலகல் தொடர் கதையாகியுள்ள சூழலில், டிசம்பர் 29-ம் தேதி ஒரே நாளில் 1,000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதாக அறிவித்துள்ளது, அக்கட்சித் தலைமை. நிர்வ... மேலும் பார்க்க