செய்திகள் :

கருத்தடை சாதனங்களின் வகைகள்; யாருக்கு எது பொருந்தும்... பக்க விளைவுகள் என்ன? - கம்ப்ளீட் தகவல்கள்!

post image

முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்குமான இடைவெளிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த கருத்தடை முறைகள், தற்போது முதல் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுவதற்கும் தேவைப்படுகிறது. அதனால், கருத்தடை சாதனங்களின் வகைகள், பயன்கள், யாருக்கு எந்தக் கருத்தடை முறை பொருந்தும், பக்க விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர் சொல்வதைக் கேளுங்கள்.

கருத்தடை சாதனம்

இது அந்தக் கால வழிமுறை!

அந்தக் காலத்தில் கருத்தரிக்காமல் இருக்கப் பாதுகாப்பான நாள்களைக் கையாண்டார்கள். அதாவது, மாதவிடாய் வந்த முதல் நாளில் இருந்து 10-வது நாளை காலண்டரில் குறித்து வைத்துக்கொண்டு, அன்றிலிருந்து 18-வது நாள் வரை தாம்பத்தியத்தைத் தவிர்த்தார்கள். ஏனென்றால், இவைதாம் கருமுட்டை உருவாகிற நாள்கள். தற்போது பல பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பதால், கருமுட்டை எப்போது உருவாகும் என்பதே தெரியவில்லை. அதனால் இந்த வழிமுறையை இன்றைய பெண்களால் கடைப்பிடிக்க முடியாது.

இந்தக் கால 'ஆப்'பை நம்பலாமா?

எந்தெந்த நாள்களில் தாம்பத்திய உறவைத் தவிர்த்தால், கருத்தரிக்காது என்பதைத் தெரிந்துகொள்ள இன்றைக்கு 'ஆப்'கள் வந்துவிட்டன. அதில், உங்களுடைய மூன்று நாள்களை பதிவு செய்து விட்டீர்களென்றால், அது சொல்லும் பாதுகாப்பான நாள்களில் மட்டும் உறவுக் கொள்ளலாம். ஆனால், இதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களுக்கு உதவி செய்யாது.

கருத்தடை

எத்தனை வகை கருத்தடை முறைகள் இருக்கின்றன?

மருத்துவர்கள் பரிந்துரைக்கிற கருத்தடை முறைகள் என்று பார்த்தால் வாய் வழியாகச் சாப்பிடுகிற மாத்திரைகள், ஊசி மருந்து, கருப்பையில் வைக்கிற காப்பர் டி என மூன்று முறைகள் இருக்கின்றன.

புதிதாகத் திருமணமானவர்களுக்கு...

புதிதாகத் திருமணமானவர்களுக்கு வீரியம் குறைவான கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். மாதவிடாய் வந்த 5-வது நாளில் இருந்து 21 நாள்கள் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும். இந்த மாத்திரையை மொத்தமாக 3 வருடம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதிலும், வருடத்துக்கு ஒரு முறை, 3 மாதங்களுக்கு இந்தக் கருத்தடை மாத்திரையைச் சாப்பிடக் கூடாது. 3 மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் சாப்பிட ஆரம்பிக்கலாம்.

இதன் பக்க விளைவுகள் என்று பார்த்தால், மாத்திரை சாப்பிடுகிற காலகட்டத்தில் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஹார்மோனல் இம்பேலன்ஸ் வராமல் இருப்பதற்காக, 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரைப் பார்த்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இரண்டு மாதவிடாய்களின் இடையே லேசான ரத்தப் போக்கு ஏற்படலாம், மாதவிடாய் ஒழுங்கற்றுப் போகலாம், மாதவிடாய் வருகிற நாள்கள் குறைந்தும் போகலாம். உதாரணத்துக்கு, 5 நாள் மாதவிடாய் வந்து கொண்டிருந்தவர்களுக்கு 4 நாளும், 3 நாள்கள் வந்தவர்களுக்கு 2 நாள் அல்லது ஒன்றரை நாள் என்று குறைந்து போகலாம். மருத்துவரின் அறிவுரையை மீறித் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகளும் வரலாம், கவனம்.

காப்பர் டி

ஒரு குழந்தைப் பெற்ற அம்மாக்களுக்கு...

இரண்டாவது குழந்தைப் பெறுவதற்கு போதிய இடைவெளி விட வேண்டும் என்று நினைக்கிற அம்மாக்களுக்கு, காப்பர் டி சரி. இது காப்பரில் செய்த 'டி' வடிவ கருத்தடை சாதனம். இதில், 4 வருடத்துக்கு ஒருமுறை மாற்றுவது, 10 வருடத்துக்கு ஒருமுறை மாற்றுவது என இரண்டு வகை இருக்கின்றன. எந்த வகை காப்பர் டி பொருத்தியிருந்தாலும், அது பொருத்தப்பட்ட இடத்தில் இருந்து நகராமல் இருக்கிறதா என்று 4 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். வீட்டிலேயே, காப்பர் டி-யுடன் இணைந்திருக்கிற நைலான் நூல் தெரிகிறதா என்று நீங்களும் பரிசோதித்து கொள்ள முடியும்.

அடிக்கடி கனமான பொருள்கள் மற்றும் தண்ணீர்க் குடங்களைத் தூக்கினாலோ அல்லது முக்கி மலம் கழித்தாலோ காப்பர் டி வெளியே வந்து விடலாம். இது கொஞ்சம் நகர்ந்தாலும் கருத்தரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடினமல்லாத அலுவலக வேலைபார்க்கிற பெண்கள் என்றால், 10 வருடங்களுக்கான காப்பர் டி-யையே வைத்துக்கொள்ளலாம். பக்க விளைவுகள் என்றால், ரத்தப்போக்கு ஏற்படலாம்.

இது எல்லா பெண்களுக்குமானது !

கருத்தடை ஊசியும் இருக்கிறது. 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில்கூட இந்த ஊசி போடப்படுகிறது. இதன் பக்க விளைவு என்று பார்த்தால் 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராது. அந்த நேரத்தில் மாத்திரைக் கொடுத்து மாதவிடாயை வரவழைத்து, 3 நாள் கழித்து மறுபடியும் கருத்தடை ஊசியைப் போடுவோம். இந்த ஊசிப் போட்டுக்கொண்டால் கருத்தரிப்பதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு.

கருத்தடை

இது நிரந்தர கருத்தடை..!

இரண்டுக் குழந்தைகள் பிறந்ததும் கருக்குழாய்களை கத்தரித்து தையல் போட்டு விடுவோம். இதனால் சினைப்பையில் உருவாகிற கருமுட்டையால் கருப்பைக்குள் செல்ல முடியாது. சுகப்பிரசவம் முடிந்தவுடன் இந்த அறுவை சிகிச்சை செய்தால் 10-வது நாளில் நீங்கள் எல்லா வேலைகளையும் செய்ய முடிகிற அளவுக்கு ஆரோக்கியமாகி விடுவீர்கள். இதுவே சிசேரியன் என்றால், அதற்காக நீங்கள் எடுத்துக்கொள்கிற ஓய்வே போதுமானது.

கருத்தடை மாத்திரையை நிறுத்தியவுடன் குழந்தைப் பிறந்து விடுமா ?

கருத்தடை மாத்திரையைப் பொறுத்தவரை, நம் உடலில் இருக்கிற ஹார்மோன்களைத்தான் கூடுதலாக மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்கிறோம். அதனால், இந்த மாத்திரைகளைச் சாப்பிடுகிறபோது, சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளிவருவதைத் தடை செய்யும், அவ்வளவுதான். மாத்திரை சாப்பிடுதை நிறுத்தியவுடன், கருமுட்டை வெளிவர ஆரம்பித்து விடும். இதனால், கருத்தரிப்பதில் எந்தப் பிரச்னையும் வராது.

ஹார்மோன்

கருத்தடை மாத்திரையில் இருக்கிற ஹார்மோன் புற்றுநோயை ஏற்படுத்துமா?

பொதுவாக, நாற்பது வயதுக்கு மேலே ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்தால் புற்றுநோய் வரலாம் என்பதால் ஹார்மோன் மாத்திரைகள் கொடுக்க மாட்டோம். ஆனால், 40 முதல் 50 வயதுக்குள் இருக்கிற பெண்களுக்கு கருப்பையில் கட்டி, ரத்தப்போக்கு என்று இருந்தால், கருப்பையை அறுவை சிகிச்சை செய்து எடுக்காமல் இருப்பதற்காக, தேவைப்படுகிற அளவுக்கு மட்டும் ஹார்மோன் மாத்திரைக் கொடுப்போம். கருப்பையின் எண்டோமெட்ரியம் லேயர் தடினமனாக இருந்தால், அது புற்றுநோய் வருவதற்காக அறிகுறியாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட பிரச்னை இருக்கிற பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையை பரிந்துரை செய்ய மாட்டோம்.

யாருக்கெல்லாம் கருத்தடை மாத்திரைக் கொடுக்கக்கூடாது?

கருப்பையில் நார்க்கட்டி இருக்கிறப் பெண்களுக்கு, கருத்தடை மாத்திரை தர மாட்டோம். மீறி சாப்பிட்டால், நார்க்கட்டியானது இன்னமும் வளர ஆரம்பித்து விடும். அதனால், யாராக இருந்தாலும் நீங்களாகவே கருத்தடை மாத்திரை சாப்பிட ஆரம்பித்து விடாதீர்கள். மருத்துவரைச் சந்தித்து, முறையான பரிசோதனைகள் செய்த பிறகுதான் கருத்தடை மாத்திரை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அதே நேரம், சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தால் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்வதில் ஒரு பிரச்னையும் ஏற்படாது.

காண்டம்

பெண்களின் காண்டம்!

பார்ப்பதற்கு ஆண்கள் பயன்படுத்துகிற காண்டமை போலவேதான் இருக்கும். அதைப் போலவே கிழிகிற ஆபத்தும் இதில் அதிகம். ஒவ்வொரு தடை உறவுகொள்ளும்போதும் புதுப்புது காண்டம் பயன்படுத்த வேண்டும். இதைப் பயன்படுத்தும்போது கணவனுக்கோ, மனைவிக்கோ பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டால், காண்டம் சரியாக பொருத்தப்படவில்லை என்று அர்த்தம். ஒரு வேளை அரிப்பு ஏற்பட்டால், அது உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.’’

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

AIDS : எய்ட்ஸ் இல்லாத இந்தியா சாத்தியமா? - மருத்துவர் விளக்கம்!

பல ஆண்டுகளாக அரசின் தொடர் விழிப்புணர்வு முயற்சிகளினால், இந்தியாவில் ஹெச்.ஐ.வி தொற்று பரவல் குறைந்த அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் ஹெச்.ஐ.வி தொற்று 44% குறைந... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலை எழுந்ததும் அடுக்கடுக்காக வரும் தும்மல்... அடக்குவது சரியா?

Doctor Vikatan: என் வயது 45. தினமும் காலை எழுந்ததும் அடுக்கடுக்காக தும்மல் வருகிறது. பலகாலமாகத்தொடரும் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? தும்மல் வந்தால் வாயைமூடி, அதை அடக்க முயற்சி செய்யலாமா?பதில் ச... மேலும் பார்க்க

Australia: ஆய்வகத்திலிருந்து காணாமல் போன 'உயிர்கொல்லி' வைரஸ்கள் - பொது மக்கள் உயிருக்கு ஆபத்தா?

,ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்தின் அரசு நூறுக்கும் மேற்பட்ட குப்பிகளில் இருந்த உயிர்கொல்லி வைரஸ்களின் மாதிரிகள் காணாமல் போனதாக அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய பொது சுகாதாரத்துறை இந்த விவகாரத்தில் விசாரணை... மேலும் பார்க்க

Apollo: வெர்டிகோ மற்றும் சமநிலை குறைபாடுகள் குறித்து அப்போலோ நடத்திய விழுப்புணர்வு பேரணி!

அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, வானகரம், இன்று “Pedal4Balance” என்ற 150 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணியைப் புதுச்சேரியிலிருந்து சென்னை வானகரம் வரை நடத்தியது. இது வெர்டிகோ (தலைச்சுற்றல்) மற்றும் சமநிலை ... மேலும் பார்க்க

இந்தியாவின் முதல் “லங்-லைஃப்” ஸ்க்ரீனிங் செயல்திட்டத்தை அறிமுகம் செய்யும் அப்போலோ கேன்சர் சென்டர்

நுரையீரல் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சையை வழங்குவதில் இந்தியாவில் முதன்மை வகிக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs), நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்காக இந்தியாவின் முதல் லங்-லைஃப் ஸ்... மேலும் பார்க்க

Health: இரத்தப்போக்கு கண் வைரஸ்...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

மார்பர்க் வைரஸ் (marburg) அல்லது 'ரத்தப்போக்கு கண் வைரஸ்' என்று அழைக்கப்படுகிற புதிய வைரஸ் ஒன்று, உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்காவிற்கு செல்லும் பயணிக... மேலும் பார்க்க