Champions Trophy 2025: `ஐசிசி பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்கிறது' - முன்னாள் வீ...
ஜமைக்காவுக்கு இந்தியாவிலிருந்து 60 டன் நிவாரணப் பொருள்கள்!
புதுதில்லி: கரீபியன் கடல்பகுதியிலுள்ள தீவு நாடான ஜமைக்காவிற்கு இந்தியா சார்பில் சுமார் 60 டன் அளவிலான மருத்துவ மற்றும் பேரிடர் கால நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஜமைக்காவின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யவும் பேரிடர் காலங்களில் உதவுவதற்காகவும் மனிதநேய அடிப்படையில் இந்தியா சார்பில் இந்த பொருள்கள் அனுப்பப்படுகின்றன.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை (டிச.14) அவரது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியதாவது,
ஜமைக்கா நாட்டின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யவும், அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மேலும் சூறாவளி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவதற்காகவும்; அவசரக் கால மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட 60 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா சார்பில் அந்நாட்டிற்கு அனுப்பபடுகின்றன என்றார்.
இதையும் படிக்க: ஜாா்ஜியா அதிபராகும் முன்னாள் கால்பந்து வீரா்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜமைக்கா நாட்டு பிரதமர் ஆண்டிரியூ ஹோல்னஸ் இந்தியாவிற்கு முதல்முறையாக கடந்த செப். 30 முதல் அக். 3 வரை வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.