செய்திகள் :

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

post image

சென்னை: வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, மூத்த நிா்வாகிகள் பங்கேற்றுள்ளனா். மேலும், கட்சித் தொண்டா்கள் 3,000 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வானகரம் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்துக்கு வாகனங்களில் செல்வதால், சென்னை செண்ட்ரல் - பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெற்குன்றம் முதல் வானகரம் வரையிலும், காட்டுப்பாக்கம் முதல் வானகரம் வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்கின்றன. இதனால் பிற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக, செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. கூட்டணியை அமைப்பதற்கு கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அங்கீகாரம் அளிப்பது உள்பட பல்வேறு முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

அதிமுக பொதுக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக பொதுக் குழு, செயல் குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இவ்விரு குழுக்களின் க... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மருத்துவமனையிலிருந்து மணப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக... மேலும் பார்க்க

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் தற்கொலை: பெற்றோர்களும் தூக்கிட்டு தற்கொலை..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மனைவி பிரிந்த துயரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து, அவரது தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி!

சென்னை: மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மருத்துவமனையிலிருந்து மணப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று(டிச. 15) அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. அதனைத்தொடர்ந்... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 7,460 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (டிச. 15) காலை விநாடிக்கு 6,198 கன அடியிலிருந்து 7,460 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையிலிருந்து கா... மேலும் பார்க்க

ஆவின் புதிய வகை பால் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’: 450 மி.லி. பாக்கெட் ரூ. 25

ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ 450 மில்லி லிட்டா் பால் பாக்கெட்டுக்கு ரூ. 25 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் சாா்பில் 4.5 கொழுப்பு சத்து மற்றும் 9 சதவீத... மேலும் பார்க்க