செய்திகள் :

அதிமுக பொதுக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

post image

அதிமுக பொதுக் குழு, செயல் குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

இவ்விரு குழுக்களின் கூட்டமும் ஒரே அரங்கத்தில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கூட்டம் தொடங்கியதும் மறைந்த அரசியல் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, எஸ்.எம்.கிருஷ்ணா, ஈவிகேஎஸ் இளங்கோவன், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கும் அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெற்ற செயல் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுக்கு இன்றைய பொதுக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுக் குழு, செயல் குழுவில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

  • மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைப்பதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம்

  • தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்

  • கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்

  • சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க திமுக அரசை வலியுறுத்தி தீர்மானம்

  • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்

  • வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளைச் சரிசெய்து, நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளன.

  • மேலும், ஃபெஞ்சால் புயல் பேரிடர் காலத்தில் சரியாக செயல்படாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • டங்ஸ்டன் சுரங்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • ஃபார்முலா 4 பந்தயம், பேனா நினைவுச் சின்னம் ஆகியற்றுக்காக நிதியை வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • கோதாவரி - காவிரி, பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

  • நீட் தேர்வு ரத்து குறித்து நாடகமாடும் அரசுக்கு கண்டனம்

  • இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம்

  • 2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாகை: குளோரின் சிலிண்டரில் கசிவு - தீயணைப்பு வீரர்கள் மயக்கம்!

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நகராட்சி நீர்த்தேக்கத் தொட்டியில் பயன்படுத்தப்படாத குளோரின் சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட நிலையில், அதனைக் கட்டுப்படுத்தச் சென்ற தீயணைப்பு வீரர்கள் இருவர் மயக்கமடைந்தனர்.நாகப்... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்! -திருமாவளவன்

தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவ... மேலும் பார்க்க

அதிமுகவின் வெற்றி வாய்ப்பு 2 லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பறிபோனது! -இபிஎஸ்

அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. பொதுக் குழு, செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

சென்னை: வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மருத்துவமனையிலிருந்து மணப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக... மேலும் பார்க்க

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் தற்கொலை: பெற்றோர்களும் தூக்கிட்டு தற்கொலை..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மனைவி பிரிந்த துயரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து, அவரது தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற... மேலும் பார்க்க