செய்திகள் :

பூமியை நோக்கி வரும் 2 சிறுகோள்கள்: நாசா எச்சரிக்கை!

post image

பூமியை நோக்கி இரண்டு பெரிய ஆஸ்டிராய்டு எனப்படும் சிறுகோள்கள் வந்துகொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இரண்டு பெரிய சிறுகோள்கள் பூமியை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருப்பதாகவும் அவை நாளை அதிகாலை பூமியை கடந்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. இவை இரண்டினாலும் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்றும் அதனைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆஸ்டிராய்டுகளில் மிகப்பெரியதிற்கு ’ஆஸ்டிராய்டு 2024 XY5’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் அது 71 அடி சுற்றளவில் சிறிய ரக விமானத்தின் அளவில் இருக்கக்கூடும் எனவும் ஒரு மணி நேரத்திற்கு 17,389 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் அது இந்திய மணிக்கணக்கில் நாளை (டிச.16) காலை 5.56 மணியளவில், பூமியிலிருந்து சுமார் 3,500,000 கி.மீ. தொலைவில் அது கடந்து செல்லக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளுக்கும் பூமிக்குமான தொலைவானது நிலவுக்கும் பூமிக்குமான தொலைவை விட 9 மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: யுபிஐ மூலம் ரூ. 223 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்து சாதனை!

அதைவிட சற்று சிறிய மற்றொரு சிறுகோளான ’ஆஸ்டிராய்டு XB6’ 56அடி சுற்றளவில் சிறிய வீடு அளவில் இருக்கும் எனவும் இது மணிக்கு 23,787 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருவதாகவும் இந்திய மணிக்கணக்கில் நாளை காலை 7.25 மணியளவில் பூமியிலிருந்து 6,690,000 கி.மீ. தொலைவில் இது கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் நிலவுக்கும் பூமிக்குமான தொலைவை விட 17.4 மடங்கு அதிக தொலைவில் பயணிப்பதால் இதனாலும் பூமிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக 150 மீட்டருக்கும் மேல் 4.6 மில்லியன் கி.மீ தொலைவில் பூமியை நோக்கி வரும் சிறுகோள்கள் மட்டுமே அபாயகரமானதாக கருதப்படும். இருப்பினும், முன்னெச்சரிக்கையோடு இருப்பதற்காக செயற்கைக் கோள்கள் மற்றும் ரேடார்கள் உதவியோடு சர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் பூமிக்கு அருகில் வரும் அனைத்து கோள்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டிராக்டர் டிராலி தலைக்குப்புற கவிழ்ந்ததில் 3 பேர் பலி!

பிகாரில் நெடுஞ்சாலையில் சென்ற டிராக்டர் டிராலி தலைக்குப்புற கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகினர். இன்று காலை பிகார் மாநிலம் ககாரியா மாவட்டத்திலுள்ள சைத்தா கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை 31இல் சென்றுக்... மேலும் பார்க்க

இரும்பு கேட் சரிந்து குழந்தைகள் உள்பட 30 பேர் படுகாயம்!

ஒடிசாவில் நிகழ்ச்சியின் போது இரும்பு கேட் சரிந்து பெண்கள் குழந்தைகள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சாலேப்பூர் பகுதியில் ராய்சுங்கூடா எனும் கிராமத்தில் நேற்று (டிச... மேலும் பார்க்க

வைரல் விடியோ: காயப்பட்ட காட்டெருமையைத் தேடும் பணி தீவிரம்!

நீலகிரி: காலில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டெருமையின் விடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தக் காட்டெருமைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் அதனை தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்... மேலும் பார்க்க

ஜமைக்காவுக்கு இந்தியாவிலிருந்து 60 டன் நிவாரணப் பொருள்கள்!

புதுதில்லி: கரீபியன் கடல்பகுதியிலுள்ள தீவு நாடான ஜமைக்காவிற்கு இந்தியா சார்பில் சுமார் 60 டன் அளவிலான மருத்துவ மற்றும் பேரிடர் கால நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஜமைக்காவின் மருத்துவத் தேவை... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: சிவாஜி சமூகநலப்பேரவை இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,கடந்த 35 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் எலி கடித்ததில் 10 வயது கேன்சர் நோயாளி பலி!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவன் எலி கடித்ததினால் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து பலியானான். ஜெய்பூரிலுள்ள அரசு புற்... மேலும் பார்க்க