தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல்தான்: அதிமுகவுக்கு ஆர...
Jayam Ravi:`டாடா' இயக்குநர், கதாநாயகியாக தமிழக டி.ஜி.பி-யின் மகள் - ஜெயம் ரவி படத்தின் அப்டேட்
தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான வேலைகளில் களமிறங்கிவிட்டார் ஜெயம் ரவி.
இவர் நடிக்கவிருக்கும் இரண்டு திரைப்படங்களுக்கான பூஜை நேற்று போடப்பட்டிருக்கிறது. ஒன்று இவரின் 34-வது திரைப்படம், மற்றொன்று சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படம். ஜெயம் ரவி-யின் 34-வது திரைப்படத்தை இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.
`டாடா' திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக கவனம் பெற்றவர், தற்போது தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்குகிறார். படத்தில் ஜெயம் ரவியுடன் தமிழக டி.ஜி.பி ஷங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கவிருக்கிறார். நேற்று வெளியான பூஜை ஸ்டிஸ்ல் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமல்ல, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பி. வாசுவின் மகன் ஷக்தி வாசு நடிக்கவிருக்கிறார். படத்தின் எழுத்துப்பணிகளில் இயக்குநர் ரத்ன குமாரும், எழுத்தாளர் பாக்கியம் சங்கரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
`ப்ரதர்' திரைப்படத்தைத் தொடர்ந்து இத்திரைப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். `டாடா' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே. பாபு மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கூடிய விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தாண்டி சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கிற சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் ஜெயம் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி இசையமைக்கிறார். இது ஜி.வி-யின் 100-வது திரைப்படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...