செய்திகள் :

Good Bad Ugly: `என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது!' - அஜித் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன்

post image
அஜித் தற்போது `விடாமுயற்சி', `குட் பேட் அக்லி' என இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கிற `விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகளை அஜர்பைஜானில் வைத்தே சமீபத்தில் முடித்திருந்தார் அஜித். இத்திரைப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா உட்பட பலரும் நடிக்கின்றனர். மேலும், படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மற்றொரு பக்கம் அஜித் `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக இருக்கிறார் என்கிற செய்தி குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். தற்போது அத்திரைப்படத்தில் அஜித் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றிருக்கிறது. இது தொடர்பாக நெகிழ்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

அவர், ``எனக்கு இப்படியான வாழ்நாள் வாய்ப்பைக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது. லவ் யூ அஜித் சார். இது அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இதுவொரு அழகான பயணமாக எனக்கு அமைந்தது.'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

`குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித்துடன் பிரசன்னா, அர்ஜூன் தாஸ் நடிக்கிறார்கள். 17 வருட இடைவெளிக்குப் பிறகு இத்திரைப்படத்தின் மூலம் ஜி.வி. பிரகாஷ் அஜித் படத்திற்கு இசையமைப்பாளராக களமிறங்கியிருக்கிறார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்திருந்தனர். ஆனால், அன்றைய தேதியில் `விடாமுயற்சி' திரைப்படம் வெளியாவதால் `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்

இந்த டிசம்பர் இரண்டாவது வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி இருக்கும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் குறித்து பார்க்கலாம்.தியேட்டர் ரிலீஸ்Miss you: (தமிழ்)என். ராஜசேகர் இயக்கத்தில் சித... மேலும் பார்க்க

SK 25: ஜி.வி பிரகாஷின் 100வது படம்; எஸ்.கேவுக்கு 25; 'பிரமாண்டமாக தயாரிப்போம்' -படக்குழு சொன்ன தகவல்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இதையடுத்து இவர் சூர்யாவுடன் இணைந்து 'புறநானூறு' திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்... மேலும் பார்க்க

Mysskin: "சூர்யாவ பத்திரமா பாத்துகணும்..." - கங்குவா விமர்சனம் குறித்து மிஷ்கின் சொல்வதென்ன?

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வியாழனன்று (நவம்பர்14) கங்குவா திரைப்படம் வெளியானது. படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனம் தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் ... மேலும் பார்க்க