செய்திகள் :

What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்

post image
இந்த டிசம்பர் இரண்டாவது வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி இருக்கும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் குறித்து பார்க்கலாம்.

Miss you: (தமிழ்)

என். ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'மிஸ் யூ'. இயக்குநராக வேண்டும் என்று கனவு காணும் கதாநாயகன், சில அரசியல்வாதிகளின் சதியால் கதாநாயகனுக்கு ஏற்படும் விபத்து, அதில் இருந்து மீண்டு வரும் கதாநாயகனுக்கு கதாநாயகி மீது ஏற்படும் காதல், கதாநாயகியை திருமணம் செய்து கொள்ள முடியாத கதாநாயகன், இறுதியில் கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை பற்றியது தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் இந்த வார திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Miss You & Soodhu Kavvum

சூது கவ்வும் - 2: (தமிழ்)

எம்.எஸ். அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ' சூது கவ்வும் 2'. கடத்தல், அரசியல் உள்ளிட்டவற்றை பற்றிப் காமெடியாக பேசும் இத்திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது‌. கடந்த 2013-ம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் நலன் குமாராசாமி இயக்கத்தில் வெளியாகியிருந்தது.

Once Upon a Time in Madras: (தமிழ்)

பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத் நடித்துள்ள திரைப்படம் 'Once Upon a Time in Madras'. தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி, அதன் காரணமாக நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை பற்றியது தான் இந்த திரைப்படம்.

Rudhiram: (மலையாளம், தமிழ், கன்னடம்)

ஜிஷோ லோன் ஆண்டனி இயக்கத்தில் ராஜ் பி. ஷெட்டி, அபர்ணா பாலமுரளி மற்றும் ரமேஷ் வர்மா சிகே ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'ருத்திரம்'. இத்திரைப்படம் இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

Zero Se Restart

Zero Se Restart: (ஹிந்தி)

2023 ஆம் ஆண்டு வெளிவந்த '12th Fail' திரைப்படத்தின் BTS காட்சிகளை உள்ளடக்கிய டாக்குமென்டரி திரைப்படம்தான் இந்தப் படைப்பு. திரைக்குப் பின்னால் இயக்குநர் விது வினோத் சோப்ரா சந்திக்கும் சிரமங்களையும், சிக்கல்களையும் இந்தப் படம் எடுத்துரைக்கிறது. இத்திரைப்படமும் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது.

இது தவிர ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் திரைப்படங்கள்:

1) Maria (ஆங்கிலம்) - Netflix

2) How to Make Millions Before Grandma Dies (Thai) - Netflix

3) Harikatha (தெலுங்கு) - Hotstar

4) Despatch (ஹிந்தி) - Zee5

5) Carry On (ஆங்கிலம்) - Netflix

ஓ.டி.டி-யில் வெளியாகியிருக்கிற வெப் சீரிஸ்:

1)One Hundred Years of Solitude (ஸ்பானிஷ்) - Netflix

2)Bandish Bandits S2 (ஹிந்தி) - Amazon Prime

kanguva

தியேட்டர் டு ஓ.டி.டி:

1) Kanguva (தமிழ்) - Amazon Prime

2)Thangalaan (தமிழ்) - Netflix

3) 7/G (தமிழ்) - Aha

4) Singham Again (ஹிந்தி) - Amazon Prime

5) Red One (இங்கிலீஸ்) - Amazon Prime

6) Mechanic Rocky (தெலுங்கு) - Amazon Prime

7) Kadha Innuvare (மலையாளம்) - Manorama MAX

8) Bougainvillea (மலையாளம்) - SonyLIV

Good Bad Ugly: `என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது!' - அஜித் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித் தற்போது `விடாமுயற்சி', `குட் பேட் அக்லி' என இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கிற `விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக... மேலும் பார்க்க

SK 25: ஜி.வி பிரகாஷின் 100வது படம்; எஸ்.கேவுக்கு 25; 'பிரமாண்டமாக தயாரிப்போம்' -படக்குழு சொன்ன தகவல்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இதையடுத்து இவர் சூர்யாவுடன் இணைந்து 'புறநானூறு' திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்... மேலும் பார்க்க

Mysskin: "சூர்யாவ பத்திரமா பாத்துகணும்..." - கங்குவா விமர்சனம் குறித்து மிஷ்கின் சொல்வதென்ன?

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வியாழனன்று (நவம்பர்14) கங்குவா திரைப்படம் வெளியானது. படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனம் தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் ... மேலும் பார்க்க