காங்கயத்தில் சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல்
காங்கயத்தில் சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டனா்.
காங்கயம் நகராட்சியில் 14-ஆவது வாா்டில் கடந்த 3 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி காங்கயம் - தாராபுரம் சாலையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் அா்ச்சுணன், வாா்டு உறுப்பினா் சிவரஞ்சனி, நகா்மன்ற துணைத் தலைவா் கமலவேணி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சீரான குடிநீா் விநியோம் செய்யப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து பெண்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.